அதிமுக தலைமை முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அதிமுக தலைமை முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

in News / Local

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. பெரும்பாலும் ஈபிஎஸ் தான் தேர்வு செய்யப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆட்சிக்கு மட்டும் தான் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டேன்,

அடுத்த ஆட்சியிலும் அப்படி இருக்க முடியாது, நான் தான் போட்டியிடுவேன் என ஓபிஎஸ் மல்லுக்கட்டி வருகிறார். அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என 7ம் தேதி அறிவிக்கப்படும் என கே.பி.முனுசாமி அறிவித்திருக்கிறார்.

இவ்வாறு அதிமுக பூகம்பம் கிளம்பி இருக்கும் நிலையில், அமைச்சர் ஒருபுறம் சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க எந்த குழப்பமும் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தான் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் கூறினார்.

இந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்துக்கு பதில் அளித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் கூறியது அவரது சொந்த கருத்து, அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top