குமரி மாவட்டத்தில் இன்று அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும்!

குமரி மாவட்டத்தில் இன்று அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 19.08.2020 முதல் அனைத்து கடைகளும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும் என்றும் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி செயல்படும் என்று ஆட்சியர் உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 19.08.2020 முதல் திருமணம் நடத்த மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி ஆணை பெறுவதற்கு marriagepasskkm@gmail.com என்ற மின்னஞ்சல் ( இமெயில் ) மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் . இதற்கான விபரங்கள் அதாவது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

நிபந்தனைகள் விபரம் , உறுதிமொழி படிவம் கன்னியாகுமரி மாவட்ட இணையதளமான kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் மேற்படி விபரங்களை அறிந்து உரியவாறு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து பொது மக்களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகள் தரப்பட்டு வருகின்ற போதிலும் பொதுமக்களில் சிலர் அறியாமையினாலும் பயத்தினாலும் நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்த போதும் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகாமல் சுயமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு மரணத்தை தழுவுகின்றனர் .

பறக்கை பகுதியை சார்ந்த முதியவர் ( வயது 64 ) ஒருவருக்கு காய்ச்சலும் , இருமலும் இருந்துள்ளது ஆறு நாட்கள் வீட்டிலேயே சுயமாக சளி காய்ச்சலுக்குரிய மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார் . அதன்பிறகு சுவாசத்தில் கோளாறு ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .

அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா நொய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது . மிகவும் தாமதமாக வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு இடது பக்க உறுப்புகள் செயல் இழந்து விட்டன . இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகி விட்டார் . இத்தகைய சம்பவங்கள் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது .

இதற்குமேலும் பொது மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருக்குமானல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்பு கொண்டு தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top