நித்திரவிளை சந்திப்பில் வெந்நீர் விட்டு மரக்கன்றை அழிக்க முயற்சி!

நித்திரவிளை சந்திப்பில் வெந்நீர் விட்டு மரக்கன்றை அழிக்க முயற்சி!

in News / Local

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்திரா பவுண்டேஷன் சார்பில் மரம் நடும் விழா நித்திரவிளையில் நடந்தது. இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஏராளமான மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு கொடுத்தனர். ஒரு மரக்கன்றை குளச்சல் ஏஎஸ்பி கார்த்திக் நித்திரவிளை சந்திப்பில் சந்தையின் முன் பக்கம் நட்டார். சமூக ஆர்வலர்களின் பரமரித்து வந்தனர்.

இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் இந்தமரக்கன்று மீது நள்ளிரவு நேரத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றியுள்ளனர். இதனால் மரக்கன்று இலைகள் வாடிய நிலையில் காணப்படுகிறது. மழைகாலத்தில் மரக்கன்று வாடிய நிலையில் காணப்பட்டதால் சமூக ஆர்வலர்களிடையே சந்தேகம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக நித்திரவிளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டெபின்தாஸ் நித்திரவிளைபோலீசில் புகார்செய்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்,

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top