நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் முதல்வர் அறிவிப்பு!

நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் முதல்வர் அறிவிப்பு!

in News / Local

நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-21-ல் முதலாம் ஆண்டு பட்டயபடிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக www.tngptc.in அல்லது www.tngptc.com என்ற இணை தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தால் பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு பதிவு கட்டணமாக ரூ,.150 இணையதளம் மூலமாக செலுத்தலாம். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பத்தை பதிவு செய்ய 20-8-20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக சான்றிதழ்களை 20-8-20 வரை பதிவேற்றம் செய்யலாம். அதில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ் போன்றவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணைய தளங்களை பார்க்கலாம்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top