பிச்சை எடுப்பதில் ஏரியா தகராறு : நாகர்கோவிலில் யாசகர் ஜார்கண்ட் பிச்சைக்காரரால் கொலை!

பிச்சை எடுப்பதில் ஏரியா தகராறு : நாகர்கோவிலில் யாசகர் ஜார்கண்ட் பிச்சைக்காரரால் கொலை!

in News / Local

இன்று கிறிஸ்தவ கல்லூரி அமைந்த பேக் கடைக்கு தமிழ்நாட்டு பிச்சைகாரர் முதலில் சென்று பிச்சை எடுத்துள்ளார். ஜார்கண்ட் பிச்சைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு உடன் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டு பிச்சைக்காரருக்கு 2 ரூபாய் பிச்சை கிடைத்துள்ளது. 'யாராவது ஒருவருக்குதான் பிச்சை போட முடியும்' என்று கூறிய கடை உரிமையாளர் ஜார்கண்ட் பிச்சைக்காரரை விரட்டி விட்டுள்ளார். இதனால், ஜார்கண்ட் பிச்சைகாரர் தமிழ்நாட்டு பிச்சைக்காரரிடத்தில் கிடைத்த 2 ரூபாயில் தன் பங்காக 1 ரூபாயை தர வேண்டுமென்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டு பிச்சைக்காரர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் நடுரோட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருவர் தமிழிலும் மற்றோருவர் ஹிந்தியிலும் கத்திக் கொண்டே தாக்கிக் கொண்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் பிச்சைக்காரர் தன் கையிலிருந்த கம்பால் தமிழ்நாட்டு பிச்சைக்காரரை அடித்து கீழே தள்ளினார் . கீழே விழுந்த தமிழ்நாடு பிச்சைக்காரரை ஜார்கண்ட் பிச்சைக்காரர் தடியால் அடித்தே கொன்று விட்டார். நடுரோட்டில் ஏராளமான மக்கள் முன்னிலையிலேயே இந்த கொலை நடந்தது. இருவரையும் யாரும் தடுக்கவும் முன்வரவில்லை என்பதுதான் சோகக்கரமானது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தை பிச்சைக்காரரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top