தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ள 49 பேரையும் கைது செய்யுமாறு அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ள 49 பேரையும் கைது செய்யுமாறு அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!

in News / Local

இந்து மக்கள் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தோவாளை பண்டாரபுரத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கே திரும்ப கொடுக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ந் தேதி தமிழகம் முழவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பு செயலாளர் பைஜு, மாவட்ட அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், துணை தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமருக்கு அவதூறு ஏற்படும் வகையில் கடிதம் எழுதிய 49 பேர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்காக சிலர் மத்திய அரசை குறை கூறி வருகிறார்கள். ஆனால், இந்த வழக்கு கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் போடப்பட்டது ஆகும். அவதூறு கடிதம் எழுதிய 49 பேரையும் கைது செய்ய வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை விருப்ப பாடமாக வைத்ததை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே போல் தமிழக கல்வி நிறுவனங்களில் இந்து சமூக நீதி போதனை நூல்களை பாடமாக வைக்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

இந்துக்கள் விழாக்களுக்கு தி.க., தி.மு.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்காதது கண்டனத்திற்குரியது. புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்த்தியதை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top