ஸ்காட் கல்லூரியில் வானியல் கருத்தரங்கம்:

ஸ்காட் கல்லூரியில் வானியல் கருத்தரங்கம்:

in News / Local

நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் வைத்து அறிவியல் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேர்ந்து ஸ்காட் கல்லூரி மாணவர்களுக்காக வானியல் கருத்தரங்கம் நடத்தினர்.கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. இராபர்ட் விக்டர் எட்வர்ட் இந்த கருதரங்கத்திற்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானியல் ஆர்வலர்கள் திரு.ஜெயமுருகன், திரு.உமாசங்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

ஸ்காட் கல்லூரியில் வானியல் கருத்தரங்கம்:

இந்த கருத்தரங்கத்தில் வானியல் தொடர்பான பாடல்கள், எளிய அறிவியல் பரிசோதனைகள், மாணவர்களின் கேள்வி பதில்கள் ஆகியவை நிகழ்த்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு வான் நோக்கல் நிகழ்வு அறிவியல் இயக்க வானியல் ஆர்வலர் திரு.உமாசங்கர் அவர்கள் மாணவர்களுக்கு வானில் தெரியும் நட்சத்திரங்கள் பற்றி எடுத்துரைத்தார். மேலும் மாணவர்கள் தொலைநோக்கி மூலம் வானில் தெரியும் விண்மீன்களைக் கண்டு இரசித்தனர்.விண்மீன்களின் பல்வேறு பெயர்களை கருத்தாளர் எடுத்துரைத்தார்.

ஸ்காட் அறிவியல் கழக செயலாளர் ஸ்ரீராம் மற்றும் அறிவியல் இயக்க பொறுப்பாசிரியர் பேரா.பெனிலா அவர்களோடு இணைந்து அறிவியல் இயக்க மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

"வானை அளப்போம் ;
கடல் மீனை அளப்போம்...
சந்திர மண்டலத்தைக் கண்டு தெளிவோம்"

என்ற பாரதியின் கனவை நனவாக்கிய ஸ்காட் கல்லூரி அறிவியல் கழக மாணவர்கலளின் செயலை இரவு வான்நோக்கும் நிகழ்வைக் காணவந்த பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றைம்பது மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இரவு வானோக்கல் நிகழ்வை இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

ஸ்காட் கல்லூரியில் வானியல் கருத்தரங்கம்:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரிமாவட்ட நிர்வாகிகள் திரு.ஜார்ஜ், திரு.சிவஸ்ரீரமேஷ், திரு.டோமினிக் ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர். காலை 9.00 மணி முதல் இரவு பத்துமணி வரை நிகழ்சிகள் நடைபெற்றன.

1 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top