‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு!

‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு!

in News / Local

நாங்குநேரி தொகுதியில் நேற்று இரவு வரை காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் . பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். திடீரென்று கட்சி நிர்வாகிகளை அழைத்த அவர், நடிகர் தனு‌‌ஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்புவதாக கூறினார். உடனடியாக கட்சி நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதையடுத்து அவர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள 'அசுரன்' படத்தின் இரவு 2- வது காட்சிக்கு சென்றார். அந்த படத்தை கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து அவர் ரசித்து பார்த்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஜெகன் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில், இன்று மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பகுதியில் அசுரன் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top