அகஸ்தீஸ்வரம் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி, போலீசார் விசாரணை!

அகஸ்தீஸ்வரம் அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி, போலீசார் விசாரணை!

in News / Local

அகஸ்தீஸ்வரம் அருகே சுக்குபாறை தேரிவிளை ரெயில்வே கேட் அருகில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ஏ.டி.எம். மையத்தின் கதவு கண்ணாடி உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அருகில் சென்று பார்த்த போது, அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த 2 ஏ.டி.எம். எந்திரங்களில் ஒரு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

அவர்கள், இதுபற்றி உடனடியாக தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. எந்திரத்தின் முன்பகுதி மற்றும் அடிப்பகுதி ஆகியவை சேதம் அடைந்து இருந்தது.

உடனே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்த்து விட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதை உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை போலீசார் கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top