கன்னியாகுமரிக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்!

கன்னியாகுமரிக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்!

in News / Local

தமிழகத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் திருநெல்வேலிக்கு வந்துள்ளனர். நேற்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதிய போட்டியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கண்டுகளித்தார்.

முன்னதாக அவர் சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு அவரை, கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவிய பொறியியல் வல்லுனர்களில் ஒருவரான ராஜூ வரவேற்றார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்துக்கு ஷேன் வாட்சன் படகில் சென்று ரசித்தார். மேலும் திருவள்ளுவர் சிலையையும் வியந்து பார்த்தார். அப்போது விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் உடனிருந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top