மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு வெளிநாட்டினர் ஆட்டோவில் பேரணி!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து குஜராத்துக்கு வெளிநாட்டினர் ஆட்டோவில் பேரணி!

in News / Local

சேவா இனடர்நேசனல் பாரத் என்ற அமைப்பு மழை, வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது நிவாரண பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, கென்யா, ஆஸ்திரேலியா, இலங்கை, வளைகுடா நாடுகள் உள்பட 17 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டியதை வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த வேண்டியும் கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை வெளிநாட்டினர் பங்கேற்கும் ஆட்டோ பேரணி தொடங்கியது.

இதன் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் நேற்று நடந்தது. பேரணியை வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சைதன்யானந்தஜி மகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செண்டை மேளம் முழங்க, பெண்கள் முத்துக்குடை பிடித்தபடி நின்று மலர் தூவி பேரணியை அனுப்பி வைத்தனர்.

நிகழ்ச்சியில் சக்‌ஷம் அமைப்பின் தேசிய இணை பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், சேவா இன்டர்நேசனல் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சுப்பிரமணியம், மாநிலத்தலைவர் வேலுமயில், துணைத் தலைவர் நல்லக்கண்ணு, மாநிலசெயலாளர் சீனிவாசன், கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன், பா.ஜனதா நிர்வாகி முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த பேரணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, கென்யா, ஆஸ்திரேலியா, இலங்கை, வளைகுடா உள்பட 17 நாடுகளை சேர்ந்த 26 பெண்கள் உள்பட 90 வெளிநாட்டினர் பங்கேற்றனர். ஒரு ஆட்டோவில் தலா 3 பேர் வீதம் 30 ஆட்டோக்களை அவர்கள் சுழற்சி முறையில் ஓட்டிச் சென்றனர்.

தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோ பயணத்தை மேற்கொள்கிறார்கள். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக நிதியும் திரட்டுகிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பேரணி நெல்லை, மதுரை, கோவை, மைசூர், கோவா, மும்பை வழியாக வருகிற 21-ந் ேததி குஜராத் மாநிலம் கர்னாவதியை சென்றடைகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top