குமரியில் காய்சசல் பாதிப்பு குறையவில்லை

குமரியில் காய்சசல் பாதிப்பு குறையவில்லை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பன்றி காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால் அதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. பன்றி காய்ச்சலுக்கு இதுவரை நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரது மனைவி லூயிஸ்மேரியும் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

தற்போது ஆசாரிப்பள்ளத்தில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் தனியார் ஆஸ்பத்திரிகளில் 9 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ளனர்.

குமரி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவுவதை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 82 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று உடனடி சிகிச்சை மேற்கொண்டு சுகாதாரத்துறையினர் வருகிறார்கள். தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைய வில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top