பாபர் மசூதி இடிப்பு தினம் குமரியில் பலத்த பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் குமரியில் பலத்த பாதுகாப்பு

in News / Local

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதாவது மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதோடு மட்டும் அல்லாது கடல் வழி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்கு படகில் சென்று கண்காணித்து வருகிறார்கள். சர்வேதச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.

பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் முக்கியமாக ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்காக ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் இந்த மெட்டல் டிடெக்டர் வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் சந்தேகப்படும் படியாக யாரேனும் வந்தால் அவர்களில் உடமைகளை சோதனை செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரயில் தண்டவாளங்கள் மற்றும் ரயில்வே பாலங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top