கேரள முதல்வரை கண்டித்து நாகர்கோவிலில் திடீர் பேனர்!

கேரள முதல்வரை கண்டித்து நாகர்கோவிலில் திடீர் பேனர்!

in News / Local

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதனை கேரள அரசு செயல்படுத்தியது. சபரிமலைக்கு சென்ற பெண்களை கேரள அரசு தடுக்கவில்லை. போலீசாரும் தடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தும் முயற்சியை மட்டுமே கேரள அரசு செய்தது. இதற்கு எதிப்பு தெரிவித்து நாகர்கோவில் பட்டகசாலியன் விளையில், கேரளா முதல்வர் பினராய் விஜயனை கண்டித்து , கிராபிக்ஸில் சாமி ஐயப்பன் கேரள முதல்வரை காலால் மிதிப்பது போன்று பேனர் வைத்துள்ளனர். இதனை காவல் துறையும், இன்னும் கவனிக்க வில்லை. இதனால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top