பிக்பாஸ் 3 துவங்கியது : போட்டியாளர்கள் யார்? - முழு விபரம்!

in News / Local

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து, மூன்றாவது சீசன் துவங்கி உள்ளது. முதல் இரண்டு பாகங்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் இரண்டு பாகங்களை போன்றே மொத்தம் 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த முறை 7 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 15 பேர் முதற்கட்டமாக களமிறங்கி உள்ளனர். வரும் வாரங்களில் இன்னும் அதிகமாகலாம்.

இன்று(ஜூன் 23) ஆரம்பமான இந்த நிகழ்ச்சி துவக்க விழா கோலாகலமாக துவங்கியது. ஒவ்வொரு போட்டியாளர்களையும் கமல் அறிமுகம் செய்து வைத்து அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.

சரி மூன்றாவது சீசனின் போட்டியாளர்கள் யார் யார் பார்ப்போம்...

01. பாத்திமா பாபு
போட்டியின் முதலாவதாக களமிறங்கியவர் பாத்திமா பாபு. செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி, பின்னர் நடிகையாக உள்ளார். அதோடு, அதிமுக., கட்சியிலும் இருக்கிறார். இவர் இம்முறை பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.

02. லாஸ்லியா
பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் லாஸ்லியா. இவர் ஒரு பிரபலமான மாடல் ஆவார்.

03. சாக்ஷி அகர்வால்
மூன்றாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். 

04. மதுமிதா
போட்டியின் நான்காவதாக களமிறங்கி இருப்பவர் மதுமிதா. இவரை இப்படி கூறுவதை விட ஜாங்கிரி மதுமிதா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் காமெடி நடிகையாக களமிறங்கியவர், பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார்.

05. கவின்
ஐந்தாவது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகர் கவின். விஜய் டிவியில் ஔிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமானவர், சமீபத்தில் வெளிவந்த நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

06. அபிராமி
போட்டியில் 6வது நபராக களமிறங்கி இருப்பவர் அபிராமி. இவர் ஒரு நடனக்கலைஞர் ஆவார்.

07. சரவணன்
ஏழாவது நபராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி இருப்பவர் நடிகர் சரவணன். பல படங்களில் ஹீரோவாக நடித்து, தற்போது குணச்சித்ர நடிகராக வலம் வருகிறார். இவரை பருத்திவீரன் சித்தப்பு சரவணன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

08. வனிதா விஜயகுமார்
போட்டியின் 8வது நபராக களமிறங்கி இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகள். சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஹீரோயின் ஆகி பிரபலமானதை விட, தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை, சர்ச்சைகளில் சிக்கியவர்.

09. சேரன்
பிக்பாஸில் 9வது போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் நடிகரும், இயக்குநருமான சேரன். இவர் இந்த போட்டியில் பங்கேற்று இருப்பதை பலரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.

10. ஷெரின்
போட்டியின் 10வது நபராக நடிகை ஷெரின் பங்கேற்றுள்ளார். துள்ளுவதோ இளமை, விசில், ஸ்டூடென்ட் நம்பர் 1 உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.

11. மோகன் வைத்யா
11வது நபராக மோகன் வைத்யா களமிறங்கி உள்ளார். கர்நாடக சங்கீத பாடகராகவும், வயலினிஸ்ட்டாகவும், விக்ரம் நடித்த சேது உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

12. தர்ஷன்
போட்டியின் 12வது நபராக களமிறங்கி இருப்பவர் தர்ஷன். இவர் இலங்கையை சேர்ந்த ஒரு மாடல் ஆவார்.

13. சாண்டி
13வது போட்டியாளராக நடன மாஸ்டர் சாண்டி களமிறங்கி உள்ளார். சின்னத்திரையில் நடனத்தால் பிரபலமாகி, தற்போது சினிமாவிலும் நடன அமைப்பாளராக வலம் வருகிறார்.

14. முகன்ராவ்
போட்டியின் 14வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் முகன்ராவ். இவரும் ஒரு மாடல் தான், மலேசியாவை சேர்ந்தவர்.

15. ரேஷ்மா
15வது போட்டியாளராக ரேஷ்மா களமிறங்கி உள்ளார். மாடலிங் துறையில் இருந்து வந்த இவர் ஒரு சில படங்களி்ல் நடித்திருக்கிறார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top