கருங்கல் அருகே ஐ.எஸ்.ஆர்.ஓ. பணியாளர் வீட்டில் பைக் திருட்டு!

கருங்கல் அருகே ஐ.எஸ்.ஆர்.ஓ. பணியாளர் வீட்டில் பைக் திருட்டு!

in News / Local

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் எடிசன்(33). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை பிரிவில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதனால் இவரை கவனித்துக் கொள்ள சென்னையில் உள்ள தனியார் நிறுவ னம் மூலம், திருநெல்வேலி ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்த செந்தில் குமார் (39) என்பவரை நியமித்து இருந்தார். மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமாரும் வேறொரு நபருடன் சேர்ந்து எடிசனின் சகோதரர் வீட்டில் இருந்து அவரது பைக்கை திருடி சென்றுள்ளனர். இது குறித்து எடிசன் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top