மூதாட்டி சொன்ன சின்னத்திற்கு வாக்களிக்காமல் வேறு சின்னத்திற்கு தேர்தல் அலுவலர் வாக்களித்ததாக கூறி பாஜகவினர் போராட்டம்!

மூதாட்டி சொன்ன சின்னத்திற்கு வாக்களிக்காமல் வேறு சின்னத்திற்கு தேர்தல் அலுவலர் வாக்களித்ததாக கூறி பாஜகவினர் போராட்டம்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி வாக்குச் சாவடியில் பாட்டி சொன்ன சின்னத்திற்கு வாக்களிக்காமல் வேறு சின்னத்திற்கு தேர்தல் அலுவலர் வாக்களித்ததாக கூறி பாஜகவினர் பெரும் போராட்டத்தில் குதித்தனர். கன்னியாகுமரி அருகே சந்தையடி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 271ல் ஹேமலதா என்ற தேர்தல் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. மாலையில் அந்த பகுதியைச் சேர்ந்த கண் தெரியாத மூதாட்டி ஒருவர் தன் மகனுடன் ஓட்டு போட வந்தார்.

அப்போது அங்கு நின்ற தலைமை அலுவலர் ஹேமலதா மூதாட்டிக்கு தான் ஓட்டு போட உதவி செய்வதாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மூதாட்டி தாமரை சின்னத்திற்கு வாக்கு போட சொன்னதாகவும் ஆனால் தலைமை அலுவலர் கை சின்னத்தில் ஓட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து அந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரி 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் ஆதிமுகவினர் அங்கு கூடி வாக்கு இயந்திரத்தை அங்கிருந்து கொண்டு செல்லவிடாமல் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலிசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அலுவலர் மீது நடத்தக் கோரியும் மறுதேர்தல் நடத்தக் கோரியும் மண்டல தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த பஸ் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரமாக இந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top