பூதப்பாண்டி தேரோட்டம்: குமரியில் கோலாகலம்

பூதப்பாண்டி தேரோட்டம்: குமரியில் கோலாகலம்

in News / Local

குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பூதலிங்க சுவாமி திருக்கோவில் தைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

வருடந்தோறும் மார்கழி மாதம் கொடியேற்றத்தோடு துவங்கி திருவிழாவானது பத்துநாட்கள் நடைபெறும். நேற்று (20.01.2019) ஒன்பதாம் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

இந்தத் தேரானது குமரி மாவட்டத்திலுள்ள ஏனைய கோவில்களில் இருக்கும் தேரை விடவும் பெரியதும், கனமானதுமாகும்.

நேற்றிரவு சப்தவர்ண நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று பத்தாம் திருவிழா நடைபெறுகிறது. இன்று இரவு தெப்போற்சவம் நடைபெறுவதோடு திருவிழா நிறைவடையும். 

 

   

  

   

  

  

   

 

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top