குமரியில் கல்லறையை உடைத்து மூதாதையர்களின் பூத உடல்கள்  திருட்டூ!

குமரியில் கல்லறையை உடைத்து மூதாதையர்களின் பூத உடல்கள் திருட்டூ!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கல்லறைகளை உடைத்து தங்களின் மூதாதையர்களின் பூத உடல்களை திருடியதாக மாற்றுத்திறனாளி ஒருவர் குமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர் மற்றும் மார்த்தாண்டம் காவல்நிலைய ஆய்வாளரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பண்டார விளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (42). மாற்றுத்திறனாளியான இவருக்கு அப்பகுதியில் முக்கால் சென்ட் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிலம் இவரின் மூதாதையர்களால் கல்லறைக்காக ஒதுக்கப்பட்டகல்லறை தோட்டம் என்றும் அவரது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா ஆகியோர்கள் பூத உடல்களை அங்கு தான் சமாதி செய்துள்ளது என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு விஷேச நாட்களிலும் மூதாதையர்களின் கல்லறையில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளார், இந்நிலையில் இந்த கல்லறை தோட்ட நிலத்தை அபரிக்கும் வகையில் கடந்த 1 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஜெகன்(35) என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து வைத்து கொண்டு எங்கள் சொந்த இடத்திற்கு அத்துமீறி வந்து ஜே.சி.பி மற்றும் டெம்போ உதவியுடன் எங்கள் சொந்த இடத்தில் இருக்கும் மூதாதையர்களின் கல்லறையை உடைத்து அதில் இருந்த பூத உடல்களையும் எடுத்து மறைத்து விட்டதாகவும் இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் ஆய்வாளர் ஆதிலிங்க போஸ் எந்த வித வழக்கு பதிவு செய்யாமல் எதிரிகளுக்கு உதவி புரியும் வகையில் மாற்றுதிறனாளியான தன்னை திட்டி வந்த வழியே போ என்றும் அனுப்பிவிட்டார.

நான் ஊனம் என்பதால் என் இயலாமையை கூறி இழிவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஜெகன், அவருக்கு துணையாக வந்த டெம்போ மற்றும் ஜே சி பி வாகன ஓட்டுனர்கள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டும் மூதாதையர்களின் பூத உடல்களை மீட்டு தர கேட்டும் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுதறனாளியான விஜயன் அவரது இரு மகன்கள் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top