நாகர்கோவிலில் தங்கையை பழிதீர்த்த அண்ணன்! தங்கையின் தற்போதைய நிலை என்ன?

நாகர்கோவிலில் தங்கையை பழிதீர்த்த அண்ணன்! தங்கையின் தற்போதைய நிலை என்ன?

in News / Local

நாகர்கோவிலில் சொத்து தகராறு காரணமாக கூட பிறந்த தங்கையையும் அவரது கணவரையும் அண்ணனே கூலிப்படை வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடன் பிறந்தவர்கள் 7 பேர். 4 ஆண்கள், 3 பெண்கள். இதில் 2 பெண்கள் இறந்துவிட்டனர். கல்யாணி என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கல்யாணிக்கும் இவரது சகோதரர் சுடலைப் பாண்டிக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு வேலையில் கல்யாணியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்யாணியை சரமாரியாக வெட்டினர். மேலும் அந்த மர்ம நபர்கள் தடுக்க முயன்ற கல்யாணியின் கணவரையும் அவரது மகளையும் தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்யாணியின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்யாணியின் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, சுடலையாண்டி தான் கூலிப்படையை ஏவி தங்கையையும் அவரது கணவரையும் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக அண்ணனே தங்கையை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top