பூதப்பாண்டி அருகே போலீஸ் மீது தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பி கைது.

பூதப்பாண்டி அருகே போலீஸ் மீது தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பி கைது.

in News / Local

பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் டேவிட்ராஜ். இவர், போலீஸ் நண்பர்கள் குழு(Friend of Police) சேர்ந்த ரதீஸ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

பூதப்பாண்டி அருகே உள்ள ஆண்டித்தோப்பு ஆற்றுப்பாலம் அருகே செல்லும் போது, அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் நள்ளிரவில் இங்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார் டேவிட்ராஜ். உடனே வாலிபர்கள் இருவரும் தகாத வார்த்தைகள் பேசி, டேவிட்ராஜ் மற்றும் ரதீஸ் ஆகிய இருவரையும் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் டேவிட்ராஜ் புகார் அளித்ததின் பேரில் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் எட்டாமடையை அடுத்த மேலகிளவக்கல்விளை பகுதியை சேர்ந்த மனோன்மணியின் மகன்கள் ஜெனிஸ் (வயது 21), அனீஸ் (28) என்று தெரிய வந்தது. மேலும் ஜெனிஸ் ராணுவ வீரராகவும், அனீஸ் வெளிநாட்டில் வேலை செய்வதும், இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்ததாகவும் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து ஜெனிஸ், அனீஸ் ஆகிய 2 பேர் மீதும் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top