தக்கலை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை காவல் துறை நடவடிக்கை எடுக்குமா??.

தக்கலை அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை காவல் துறை நடவடிக்கை எடுக்குமா??.

in News / Local

குமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மாங்கோடு பனவிளையை சேர்ந்த மரிய சுரேஷ் என்பவர் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மாமியார் திருமதி சொர்ணம் என்பவரை பார்க்க கடந்த ஞாயிறு 9-2-2020 இரவு 8:00 மணியளவில் சென்றபோது மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தில் அங்கிருந்த காவலாளிகள் சேர்ந்து கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதில் குடல் சிதைந்து ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிட்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலை 2:30 மணிக்கு மரணமடைந்தார்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த பின் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என கணவனை இழந்த இளம் மனைவி மற்றும் உறவினர்கள் தக்கலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் நடைபெற்றது.

அரசின் பொது மருத்துவமனைக்கு வந்த சக மனிதனை வெறும் கருத்து முரண்களுக்காக அரசு ஊழியர்களே தாக்கி கொலை செய்வதென்பது அருவருக்கத்தக்க காட்டிமிராண்டி செயல் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவமனை எதிரில் உள்ள டீ கடையில் CCTv கேமராவில் காட்சிகள் பதிவு ஆகிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top