நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

in News / Local

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, இதை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்கக்கோரியும் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தங்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர். நேற்று காலையில் இருந்து மதியம் வரை போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் இந்திரா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பி.எஸ்.என்.எல். ஊழியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராஜூ, ஆறுமுகம், செல்வம், ஜெயபால் ஆகியோர் விளக்க உரையாற்றினர். பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராமச்சந்திரன், மனோகர், தங்கமோகன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அனில்குமார் சிறப்புரையாற்றினார். முடிவில் பழனிசாமி நிறைவுரையாற்றினார். இந்த போராட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பணியாற்றும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர். போராட்ட முடிவில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கைளை விரைவில் நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 14–ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top