கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் திறந்துவைத்தார்.
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் தொடங்கிய நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் தொடக்க அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக நீர் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட மோர்பந்தலை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் தர்பூசணி பல வகைகள் உள்ளிட்டவையும் அதிமுக சார்பில் இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
0 Comments