குளச்சலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை - வாலிபர் கைது!

குளச்சலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை - வாலிபர் கைது!

in News / Local

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.இந்நிலையில் குளச்சல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சணல் குமார் சக போலீசுருடன் இன்று குளச்சல் அருகே உள்ள ஒரு பள்ளிகூடம் பகுதியில் வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குளச்சல் பகுதியை சேர்ந்த முகமது இர்ஷாத்(28) என்பது தெரியவந்தது.

பின்பு போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக சுமார் 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். குறிப்பாக இவர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்பு கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top