திருட்டு வழக்கில் 20 மாதங்களுக்கு பின் வழக்கு!

திருட்டு வழக்கில் 20 மாதங்களுக்கு பின் வழக்கு!

in News / Local

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சினுகுமார். இவரது மனைவி பிரதீபா. பிரதீபாவின் தாயார் வீடு இலவுவிளை பகுதியில் உள்ளது. கடந்த 2017 நவம்பரில் பிரதீபா பிரசவத்திற்காக தனது தாயார் வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் வீடு புகுந்து பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் பீரோவில் இருந்த ருபாய் 45 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இது சம்பந்தமாக பிரதீபாவின் சகோதரர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு ஏதுமின்றி அவரை திருப்பி அனுப்பினர்.

அதேவேளை திருட்டு நடந்த அன்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறிக்குதித்து வீடு புகுந்த காட்சிகள் அருகில் உள்ள வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை பிரதீபா தரப்பினர் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் எட்வின் ஜோஸ் (27) என்பவரை கருங்கலில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதுசம்பந்தமாக நாளிதழ்களில் படத்துடன் அந்த செய்தி வெளியானது. இதை பார்த்த பிரதீபா, 2017ல் வீடு புகுந்து தன்னிடம் நகை திருடியவரும் இவர் தான் என அடையாளம் கண்டு கொண்டார். இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவு டன் நேற்று முன்தினம் கருங்கல் காவல் நிலையத்தில் பிரதீபா புகார் செய்தார். போலீசார் எட்வின் ஜோஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top