மணவாளக்குறிச்சி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி - 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

மணவாளக்குறிச்சி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி - 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

in News / Local

மணவாளக்குறிச்சி அருகே ஒரப்பனவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 29). டிப்ளமோ படித்துள்ள. இவர் கடந்த 2013-ம் ஆண்டு மின்சார துறையில் தொழில்நுட்ப பிரிவில் வேலைக்காக விண்ணப்பம் செய்தார்.

இவரிடம் சரல் பகுதியை சேர்ந்த சதீஷ் (45), திருநயினார்குறிச்சியை சேர்ந்த ரகு (50) ஆகியோர் கிரிஷ்ணகுமாரிடம் பணம் கொடுத்தால் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறினர். அதன்படி, கிரிஷ்ணகுமார் அவர்கள் கேட்டுக்கொண்டப்படி, ரூ. 2 லட்சத்து 59 ஆயிரம் கொடுத்தார். அந்த பணத்தை அவர்கள் மதுரையை சேர்ந்த குமார் என்பவரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

அனால், இதுவரை வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணகுமார், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால், அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகுமார் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக சதீஷ், ரகு, குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top