அண்ணா பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 8 பவுன் செயின் பறிப்பு!

அண்ணா பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 8 பவுன் செயின் பறிப்பு!

in News / Local

தோவாளை முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் சிவதாணு பிள்ளை. இவரது மனைவி வள்ளியம்மாள் (63). இவரது உறவினர் ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவரை பார்க்க வள்ளியம்மாள் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறியுள்ளார்.

அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தியாரோ மர்ம நபர் வள்ளியம்மாள் கழுத்தில் கிடந்த 8 பவுன் செயினை பறித்துச்சென்றனர். இது குறித்து வள்ளியம்மாள் கோட் டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top