சீன அமைச்சர்கள் மாமல்லபுரம் வருகை!

சீன அமைச்சர்கள் மாமல்லபுரம் வருகை!

in News / Local

மாமல்லபுரம் கடற்கரையில் அமைந்துள்ள பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சிற்பக் கலைகளை ரசிப்பதற்காக சீனப் பிரதமர் ஜின்பிங் இந்தியா வந்தார். சீனப் பிரதமரை வரவேற்று மாமல்லபுர வரலாற்று சிறப்புகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு விளக்கினார். மேலும் வரலாற்று சின்னங்கள் முன் நின்று இருவரும் கூட்டாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

சீனப்பிரதமர் வருகைக்குப் பின் மாமல்லபுரத்திற்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீன அமைச்சகத்தில் இருந்து 30 பேர் கொண்ட குழு மாமல்லபுர சிற்பக் கலைகளை ரசிப்பதற்காக தமிழகத்திற்கு வந்தனர். சீன அமைச்சர்களுக்கு பாதுகாப்பாக 10 காவல்துறை அதிகாரிகளும் சீனாவில் இருந்து வந்திருந்தனர்.

சீன அமைச்சர்களை தமிழக சுற்றுலா அலுவலர் எஸ்.எஸ் சக்திவேல் தலைமையிலான குழு வரவேற்று மாமல்லபுரத்தின் எழிலை சுற்றிக் காட்டினர். சீனப் பிரதமரும் இந்தியப் பிரதமரும் எங்கெல்லாம் நின்று புகைப் படங்கள் எடுத்துக் கொண்டார்களோ அங்கெல்லாம் சீன அமைச்சர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். குறிப்பாக வெண்ணை உருண்டை சீன அமைச்சர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. வெண்ணை உருண்டையை தாங்கிப் பிடிப்பது போல் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

அர்ச்சுணன் தபசு, கடற்கரை கோவில், கிருஷ்ண மண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம், ஐந்துரதம், வெண்ணை உருண்டை ஆகிய இடங்களை சீன அமைச்சர்கள் ஆவலோடு கண்டு மகிழ்ந்தனர். சீன அமைச்சர்கள் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பகுதியில் பலத்த போலிஸ் பாதுகாப்பு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top