சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை கவரும் வகையில் ரெயில் பெட்டி வடிவில் வகுப்பறைகள்!

சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை கவரும் வகையில் ரெயில் பெட்டி வடிவில் வகுப்பறைகள்!

in News / Local

கல்வி வளர்ச்சிக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கி பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு,. அதன்படி, அரசு பள்ளிக்கூடங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. குடிநீர்வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட் வகுப்புகள், கம்ப்யூட்டர் வசதி என அனைத்து நவீன வசதிகளும் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாணவ–மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச நோட்டு, புத்தகம், சீருடை, மதிய உணவு, சைக்கிள் போன்றவையும் வழங்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் முதல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.

நாகர்கோவில் அருகே சொத்தவிளையில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை கவரும் வகையில் வகுப்பறையை ரெயில் பெட்டி வடிவில் அமைத்து உள்ளனர். இங்கு உள்ள வகுப்பறையின் வெளிப்பகுதியில் ரெயில் பெட்டி போல வரைந்துள்ளதால் வெளியில் இருந்து பார்ப்பதற்கு பள்ளி வளாகத்தில் ரெயில் பெட்டி நிற்பது போன்று காட்சி அளிக்கிறது. இது மாணவர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும், இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சேர்க்கையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

எங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது முன்னாள் மாணவர்கள் சேர்ந்து எங்கள் பள்ளியின் வகுப்பறையை ரெயில் பெட்டி போன்று வர்ணம் தீட்டி கொடுத்துள்ளனர். இது புதிதாக சேரும் மாணவர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தற்போது, பள்ளியில் 145 மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் புதிதாக 49 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top