குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

in News / Local

இன்று உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் நாளை அனைத்து கிறிஸ்தவர்களும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்திலிருந்தே மக்கள் தங்கள் வீட்டை அலங்கரிப்பது, சிறிய வர்ண விளக்குகளை கட்டுவது , இயேசு கிறிஸ்துவை வரவேற்கும் விதமாக தத்தம் வீட்டுமுன் நட்சத்திரங்களை கட்டி அலங்கரிப்பது, குடில் அமைத்து கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் விதமாக சிறிய பொம்மைகள் வைத்து ரசிப்பது போன்ற காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொஞ்சம் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும். டிசம்பர் மாதமென்றாலே குமரி மாவட்டம் முழுவதும் அமர்க்களப் பட்டுவிடும். அதே போல இந்த ஆண்டும் தேவாலயங்களில் வர்ண விளக்குகள், அலங்காரங்கள், களியல் நடனங்கள் என்று கொண்டாட்டம் களைக்கட்டியது. ஆலயங்களில் இன்று அதிகாலை ஆராதனை பரவலாக எல்லா தேவாலயங்களில் நடைபெற்றது. மக்கள் புத்தாடை உடுத்தி , ஆலயத்துக்கு தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top