கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள காமராஜரின் மார்பளவு வெண்கலசிலைக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், குமரிமாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
இதில் பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், அ.தி.மு.க. பேரூர் செயலாளர்கள் வின்ஸ்டன், சீனிவாசன், கைலாசம் ராஜபாண்டியன், ரவிபுதூர் ஊராட்சி செயலாளர் செல்லம்பிள்ளை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெஸிம், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி, பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, பேராசிரியர் டி.சி.மகேஷ், வக்கீல் பாலஜனாதிபதி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வக்கீல் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments