சம்பளம் வழங்கக்கோரி கல்லூரி பேராசிரியர்கள் 2வது நாளாக தர்ணா!

சம்பளம் வழங்கக்கோரி கல்லூரி பேராசிரியர்கள் 2வது நாளாக தர்ணா!

in News / Local

திங்கள் சந்தை அருகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், பணியாளர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். இந்நிலையில் கடந்த 2 மாதமாக இக்கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பேராசிரியர்கள், பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு பயனும் இல்லை .

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் அறை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேராசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடு ஏற்படவில்லை , மாலை வரை போராட்டம் நீடித்தது.
நேற்று 2வது நாளாக போராட்டம் நீடித்தது. கல்லூரி பேராசிரியர்கள் முதல்வர் அறை முன்பும், மாணவர்கள் நுழைவு வாயில் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top