ஓட்டல் உரிமையாளரிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி, அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் மீது புகார்!

ஓட்டல் உரிமையாளரிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி, அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேர் மீது புகார்!

in News / Local

ஈத்தாமொழி வணிகர் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல். இவர் அப்பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மனைவியுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரும், நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த நில விற்பனையாளர் ஒருவரும், வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கினார்கள். பணம் கொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை வீட்டு மனையையும் வாங்கி தரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திரும்பக்கொடுக்கவில்லை. இந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டுக்கு சென்று நான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டதற்கு மிரட்டல் விடுக்கிறார். அவருக்கு உடந்தையாக இருக்கும் நில விற்பனையாளரும் என்னை மிரட்டுகிறார். எனவே நம்பிக்கை மோசடி செய்து எனது பணத்தை அபகரித்துக் கொண்ட 2 பேர் மீதும் சட்டப்படி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top