களியக்காவிலையில் சாலைகளை சீரமைக்க கோரி நாளை காங்கிரஸ் போராட்டம்!

களியக்காவிலையில் சாலைகளை சீரமைக்க கோரி நாளை காங்கிரஸ் போராட்டம்!

in News / Local

குமரி மேற்குமாவட்டகாங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையான களியக்காவிளை, நாகர்கோவில் காவல்கிணறு சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், நகர்புற, கிராமப்புற சாலைகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது.இதனால் ஏற்படும் விபத்துகளினால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் குமரி மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

குமரி மாவட்டத்தின் இதர வளர்ச்சி பணிகளும் முடக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சாலைகளை செப்பனிட பலமுறை வலியுறுத்தி பேசியும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் ஏற்பட வில்லை. எனவே மக்களின் சிரமங்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்று காணப்படும் அனைத்து சாலைகளையும் செப்பனிட வலியுறுத்தியும் குமரி மேற்கு மாவட்டகாங்கிரஸ் கமிட்டிசார்பில் களியக்காவிளை பேருந்து நிலையம் முன்புறம் நாளை (16ம்தேதி) காலை 9 மணிக்கு சாலை மறியல் நடக்கிறது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ . தலைமை வகிக்கிறார்.

இப்போராட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார, நகர தலைவர்கள், நிர்வாகிகள், ஊராட்சி, பேரூராட்சி தலைவர்கள், அனைத்து துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டாரதலைவர்கள்,பூத் கமிட்டி உறுப்பினர்கள், வார்டு கமிட்டி தலைவர்கள், பொதுமக்கள், செயல் வீரர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top