தொடர் கனமழையால் பேச்சுப்பாறை அணை மறுகால் உடைப்பு.! அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு

தொடர் கனமழையால் பேச்சுப்பாறை அணை மறுகால் உடைப்பு.! அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆய்வு

in News / Local

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் தொடர் கனமழையால் பேச்சிப்பாறை மற்றும் கோதையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது,அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறையினரால் வெளியேற்றப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் மறுகால் பகுதியில் உள்ள சாலைகள் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்த தொடர்ந்து அந்த சாலை சீரமைக்கும் பணியினை இன்று தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ;பேச்சிப்பாறையில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்து விரைந்து முடித்து வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன் .நிரந்தர தீர்வு ஏற்பட 50 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் மற்றும் சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்படும் .

தற்போது இரண்டு நாட்கள் வெயில் காரணமாக தண்ணீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது .கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் முதலமைச்சர் , மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் பகுதியாக சேதமடைந்த கூரை வீடு ஒன்றிற்கு ரூ.4500 மற்றும் முழுமையாக சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ 5000 வீதமும் வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளார்கள்.

இருப்பினும் இந்த நிவாரண நிதி அவர்களுக்கு சரி செய்ய போதுமானதாக இருக்காது என்பதால்தான் இலவச வீடு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு முழு முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.

மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களுக்கு புதிய குடியிருப்புகள் வளங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top