மார்த்தாண்டம் அருகே ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா

மார்த்தாண்டம் அருகே ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா

in News / Local

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மார்த்தாண்டம் அருகே பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட திக்குறிச்சி செக்குமாமூடு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கும், அவர் மகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடந்தது. அப்போது அந்த மூதாட்டியின் குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழித்துறை களுவன் திட்டை ஆர்.சி.தெரு பகுதியில் முதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பிறகு நடந்த சோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதற்கிடையே புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து 18 பேர்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்ந்து ஆர்.சி.தெரு பகுதியில் உள்ள 113 வீடுகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார அதிகாரி ராமச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாகோடு பேரூராட்சிக்கு உள்பட்ட மேல்புறம் நடுதலவிளை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top