குளச்சல் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பா.ரமேசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வேட்பாளர்கள் ,அரசியல் கட்சி முகவர்கள் ,அரசு ஊழியர்கள்,பத்திரிக்கையாளர்கள் என ஒட்டு மொத்த பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை கடந்த ஒரு வாரமாக தொடந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட பா.ரமேசுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இன்று வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் குளச்சல் தொகுதி பா.ஜ.க தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments