குமரி மாவட்டத்தில்  ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது கொரோனா.

குமரி மாவட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது கொரோனா.

in News / Local

நாகர்கோவில் சப் ஜெயிலில் இருக்கும் 19 கைதிகளுக்கு கொரேனா.. அதே போல் பாலியல் குற்றவாளி நாகர்கோவில் காசியின் தந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்படுள்ளது...

இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நாளில் 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது.
குமரிமாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதேபோல் நேற்று மட்டும் மூன்று காவல் நிலையங்கள் இ.எஸ்.ஐ.மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளன...

அரசு உத்தரவு படி ( 22.07.2020 ) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொரோனா கவனிப்பு மையங்களில் ( Covid Care Centre ) தனியார் உணவகங்கள் வாயிலாக உணவு வழங்கப்படுகிறது . முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 96 பேருக்கு 22 ம் தேதி அபராதமாக ரூபாய் 9600 வசூலிக்கப்பட்டது . கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 70893 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . - தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை , கோவிட் கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1454 பேர் சிகிச்சையில் உள்ளனர் . - கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 1516 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . - கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 6329 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4712 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் .
ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6342 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன....

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top