குமரியில் புதிய உச்சம் தொட்ட கொரோனா: பாதிப்பு 908.,18 பேர் சாவு;

குமரியில் புதிய உச்சம் தொட்ட கொரோனா: பாதிப்பு 908.,18 பேர் சாவு;

in News / Local

குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்குபுதிய உச்சமாக ஒரே நாளில் 908 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமாக உள்ளது. தினமும் பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 700-க்கு மேல் உயர்ந்து வருகிறது.இதனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்களும், நர்சுகளும் திணறி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. குமரி மாவட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 908 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி 18 பேர் உயிரிழந்தனர்.உயிரிழப்பு அதிகரித்து வருவதால் பிணங்களை வைக்க பிணவறையில் இடம் இல்லாமல் வார்டிலேயே பிணங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கையும் 527 ஆக உயர்ந்துள்ளது.. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,891 ஆக உயர்ந்திருக்கிறது..

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top