கொரானா இரண்டாம் நிலை பரவல் எதிரொலி.! குமரி அம்மன் கோவில்களில் கொடை விழா நாட்கள் குறைப்பு ;

கொரானா இரண்டாம் நிலை பரவல் எதிரொலி.! குமரி அம்மன் கோவில்களில் கொடை விழா நாட்கள் குறைப்பு ;

in News / Local

இரண்டாம் நிலை கொரோனா பரவல் காரணமாக குமரி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் நடைபெறும் திருவிழா நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன் கோயில்கள் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம் .கடந்த ஆண்டு ககொரோனா முழு ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் உள்ள எந்த கோயில்களிலும் கொடை விழா நடத்தப்படவில்லை .

ஆனால் இந்த ஆண்டு கொடை விழா சிறப்பாக நடைபெறும் என பக்தர்கள் நினைத்து வந்த நிலையில், இரண்டாம் நிலை கொரானா பரவல் காரணமாக அரசு கொடை விழா நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இரண்டு நாட்கள் என தொடங்கி பத்து நாட்கள் வரை பிரம்மாண்டமாக நடைபெறும் திருவிழாக்கள் இந்த ஆண்டு கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக பல பகுதிகளில் திருவிழா நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாக்கள் ஒரு நாட்களாகவும், பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும் விழாக்கள் ஓரிரு நாட்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த ஊர் நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top