மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா : குமரியில் ஒரே நாளில் 15 பேர் தொற்றுக்கு பலி!!

மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா : குமரியில் ஒரே நாளில் 15 பேர் தொற்றுக்கு பலி!!

in News / Local

கன்னியாகுமரி:

ஒரே நாளில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக தீவிரமாக உள்ளது. தினமும் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலியானோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது நாள் ஒன்றுக்கு 10 பேர் வரை பலியாகி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் கொரோனாவால் 46 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஒரே நாளில் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது.

இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கம் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதே வேகத்தில் உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுவதாகவும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி தனி மனித ஊரடங்கை செயல்படுத்த அறிவுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.ஆஷா அஜித்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் கிறுமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top