குமரி மாவட்டம், தனியார் கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது!

குமரி மாவட்டம், தனியார் கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் கைது!

in News / Local

குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தாளாளராக, நாகர்கோவிலை சேர்ந்த ரவி (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அதே கல்லூரியில் பேராசிரியையாக ஒரு பெண் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் அந்த பேராசிரியைக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பேராசிரியை, இதுகுறித்து தன்னுடைய வீட்டிலும், உறவினர்களிடமும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்று பேராசிரியையிடம் அத்துமீறியது குறித்து தாளாளர் ரவியை கண்டித்தனர். உடனே தாளாளர் ரவி தன்னுடன் வேலை செய்யும் ஊழியர்களுடன் சேர்ந்து பேராசிரியையின் உறவினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து பேராசிரியை பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் அதே கல்லூரியில் பணியாற்றும் 2 பேராசிரியைகள், பாலியலுக்கு உடந்தையாக இருந்ததாக திடுக்கிடும் தகவலும் வெளியானது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாளாளர் ரவி மற்றும் 2 பேராசிரியைகளை கைது செய்தனர். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top