மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை.! தேர்தல் பார்வையாளர்கள் இன்று குமரி மாவட்டம் வருகை;

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை.! தேர்தல் பார்வையாளர்கள் இன்று குமரி மாவட்டம் வருகை;

in News / Local

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற 2-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து முடித்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக ஐஏஎஸ், மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகள் 7 பேர் கொண்ட தேர்தல் பார்வையாளர்கள் இன்று கன்னியாகுமரி வருகின்றனர்.அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகின்றனர். மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெரும் மையத்தை கண்காணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top