இந்திய நாட்டின் இரண்டாம் பெரிய விருதான பத்ம விருதுகள் 2021 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ளது. இவ்விருதுகள் பல துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்கள், அதாவது கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல்,பொது விவகாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில் விளையாட்டுத்துறையில் அளப்பரிய சாதனை.
புரிந்தவர்கள் அவர்களது விண்ணப்பத்தினை www.padmaawards.gov.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து, பதிவேற்றம் செய்யப்பட்ட சாதனையின் நகல்களை நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் 05.09.2020க்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரசாந்த் மு.வடநேரே அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
0 Comments