மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பக்கச்சுவர் விரிசல், பெயிண்ட் பூசி சமாளிப்பு!

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பக்கச்சுவர் விரிசல், பெயிண்ட் பூசி சமாளிப்பு!

in News / Local

மார்த்தாண்டத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு, தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது.

பாலம் அமைக்கும் போதே அதன் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது மேம்பால பக்கச்சுவர் பல இடங்களில் விரிசல் கண்டுள்ளது. குறிப்பாக மேம்பாலத்தின் ஒவ்வொரு ஜாயின்ட் பகுதியிலும் விரிசல் காணப்படுகிறது. சில இடங்களில் தாறுமாறாக விரிசல் விழுந்துள்ளது. மேலும் உள்ளே கம்பிகள் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன. தொடர்ந்து இதுபோல் விரிசல்கள் ஏற்பட்டால் பாலத்தின் உறுதித்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம். - மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது - விரிசல் பகுதியில் உள்ள சிறுசிறு காங்கிரீட்துண்டுகள் உதிர்ந்து கீழே விழும் - அபாயமும் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் உறுதித்தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து பிரபல தமிழ் செய்தி நாளிதழ் ஓன்று படத்துடன் செய்தி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு விரிசல்களை பெயின்ட் பூசி மூடி மறைத்துள்ளனர். ஆனால் முறையாக அந்த இடத்தில் சிமென்ட் பூசி அடைக்கவில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போது இன்னும் சில தினங்களில் மீண்டும் விரிசல்கள் பெரிதாகும். அது மேம்பால பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top