வருகிற 22-ம் தேதி குமரியில் உள்ளூர் விடுமுறை

வருகிற 22-ம் தேதி குமரியில் உள்ளூர் விடுமுறை

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் ,சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 22–ம் தேதி இயங்கும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜனவரி மாதம் 12–ம் தேதி குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். வருகிற 22–ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top