இளம் பெண்ணுக்கு காலையில் பிரசவம் - மாலையில் திருமணம்

இளம் பெண்ணுக்கு காலையில் பிரசவம் - மாலையில் திருமணம்

in News / Local

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையில் குழந்தை பிறந்த இளம் பெண்ணுக்கு மாலையில் திருமணம் நடைபெற்றது.

கடவம்பாக்கத்தை சேர்ந்த கோகிலா என்ற கல்லூரி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரும் காதலித்துள்ளனர். காதலனிடம் நெருங்கி பழங்கியதால் கோகிலா கர்ப்பம் அடைந்தார்.

அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முன்வந்த நிலையில், இளைஞரின் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த கோகிலாவிற்கு கடந்த சனிக்கிழமை அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

அன்றைய தினமே திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் இருதரப்பைச் சேர்ந்தவர்களையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, காதல் ஜோடி திருமணம் செய்து வைக்கப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top