மத்திய அரசின் அறிவிப்பை மீறி வாடிக்கையாளர்களிடம் இஎம்ஐ வசூலிப்பதாக கூறி மார்த்தாண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் அறிவிப்பை மீறி வாடிக்கையாளர்களிடம் இஎம்ஐ வசூலிப்பதாக கூறி மார்த்தாண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

in News / Local

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் மற்றும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் இஎம்ஐ வசூலிக்க கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவை மீறி தனியார் நிறுவனங்கள் மற்றும் பைனான்ஸ் கம்பெனிகள் வாடிக்கையாளர்களை மிரட்டி இஎம்ஐ வசூலிப்பதாகவும், மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கேட்டு காங்., சேவாதளம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஜோசப் தயாசிங் தலைமை வகித்தார். பொது செயலாளர் ராஷிக், பென்ராஜேஷ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top