சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

in News / Local

தமிழ் புத்தாண்டையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

கொரோனா பரவலால் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று அதிகாலையிலேயே குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் பலரும் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று சாமியை வழிபட்டனர்.

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் விஷூ கனி காணும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவலால் நேற்று கோவிலில் கனி காணும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 

நேற்று அதிகாலை தாணுமாலயனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு நித்ய காரிய பூஜை நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 7 மணிக்கு பிறகு கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்ட கோவில்களின் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஆய்வாளர் கோபாலன் மற்றும் கோவில் பணியாளர்கள் சாமி தரிசன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top